கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாகவும் சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.