சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கியமானவர்கள் பலரை
ஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார்.
, சீன கடற்படையின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் லி ஹன்ஜுன், மூத்த அணு விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோர் தேசிய மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கைகளின்படி, ஒரு காலத்தில் ஃபுஜியனில் ஒரு பெரிய தளத்திற்குத் தலைமை தாங்கி முக்கிய பயிற்சிப் பணிகளை வகித்த ஒரு முக்கிய கடற்படை நபரான வைஸ் அட்மிரல் லி, கடற்படை வீரர்களுக்கான காங்கிரஸால் தேசிய மக்கள் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.
சீனாவின் அணுசக்தி துறையில் செல்வாக்கு மிக்க நபர்
இதேபோல், சீனாவின் அணுசக்தி நிறுவனத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபரும் சீன தேசிய அணுசக்தி கழகத்தில் முன்னாள் துணைத் தலைமைப் பொறியாளருமான லியு ஷிபெங், கன்சு மாகாண மக்கள் காங்கிரஸால் வெளியேற்றப்பட்டார்.
சீனாவின் முதல் அணு ,ஹைட்ரஜன் குண்டுகளுக்குப் பொறுப்பான இரகசியமான 404 தளத்தில் லியுவின் தலைமைத்துவம் குறிப்பிடத்தக்கது.
ஊழல் ,விசுவாசமின்மை காரணமாக மத்திய ராணுவ ஆணையத்திலிருந்து ஜெனரல் மியாவோ ஹுவா சமீபத்தில் வெளியேற்றப்பட்டதையும், பிற உயர்மட்ட மக்கள் விடுதலை இராணுவ மாற்றங்கள் ஏற்பட்டதையும் தொடர்ந்து இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிகரித்து வரும் உள் மற்றும் வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், சீனாவின் பாதுகாப்புத் துறைகளில் ஜி ஜின்பிங் தன்னுடைய வலிமையான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் நடவடிக்கையாக இது பார்க்கபப்டுகிறது.