கொழும்பு தேசிய அருங்காட்சியகமும், அதன் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் மூடப்படுமென தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம், தமிழ் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை தினங்களிலும் அருங்காட்சியகங்கள் மூடப்படும்.
ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து அருங்காட்சியகங்களும் பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்குமெனவும் தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது.