ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் திகதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு 2 இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடியது.
பஞ்சாப்புக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18 ஜோஸ் இங்லீஷ் 4, கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
6 விக்கெற்கலைஓட்டங்களைத் தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதிரடி காட்ட முயற்சித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார். அவரை வெளியேற்றிய சூயஸ் ஷர்மா அடுத்ததாக வந்த முசீர் கானை டக் அவுட்டாக்கினார். இறுதியில் பஞ்சாப்பை 14.1 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 101 ஓட்டங்கள் எடுத்தது.
பிளே ஆஃப் சுற்றில் இரண்டாவது குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பஞ்சாப் சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான எலிமினேட்டரில் லக்னோவும் 101 ஓட்டங்கள் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளே போட்டியில் மிகவும் குறைந்த ஓவர்கள் (14.1) விளையாடிய அணி என்ற மோசமான சாதனையையும் பஞ்சாப் படைத்துள்ளது.
2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி 16.1 ஓவர்கள் விளையாடியதே முந்தைய மோசமான சாதனை. பவர் பிளே முதலே அனல் பறக்கும் வகையில் பவுலிங் செய்த பெங்களூரு அணிக்கு சூயஸ் சர்மா 3, ஜோஸ் ஹேசல்வுட் 3, யாஷ் தயாள் 2, செபார்ட் , புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பெங்களூரு அணி 4வது முறையாக பிரிமியர் தொடரின் பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 3 பைனல்களிலும் (2009, 2011, 2016) தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தது.
102 ஓட்டங் கள் என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் – விராட் கோலி ஆட்டத்தை தொடங்கினார். ஜேமிசன் வீசிய 4வது ஓவரில் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ஓட்டங் கள் எடுத்து விராட் கோலி அவுட்டானார். அந்த ஓவரில் ஜேமிசனும், அடுத்த ஓவரில் ஓமர்சாயும் வேகத்தால் ஆர்சிபி அணியை அச்சுறுத்த முயற்சித்தனர்.
ஆனால், பில் சால்ட் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ஆட்டத்தை முழுவதும் ஆர்சிபி வசம் கொண்டு வந்தார். அவருக்கு மயங்க் அகர்வாலும் ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி முழுவதும் ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதி செய்த நிலையில் நன்றாக ஆடிய மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 19 ஓட்டங்கள் எடுத்து முஷீர்கான் சுழலில் அவுட்டானார்.
பெங்களூரின் வெற்றிக்கு 17 ஓட்டங் கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பில் சால்ட்டுடன் கப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பில் சால்ட் அரைசதம் விளாசினார். கடைசியில் கேப்டன் ரஜத் படிதார் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணி இலக்கை அடைய வைத்தார். பில் சால்ட் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 56 ஓட்டங் களுடனும், கப்டன் ரஜத் படிதார் 8 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ஓட்டங் களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங் களை எட்டிய ஆர்சிபி அணி முதல் அணியாக அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அகமதாபாத்தில் நடக்கும் குவாலிஃபயர் 2ம் போட்டியில் ஆட உள்ளது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத் – மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அவர்கள் மோத உள்ளனர். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆர்சிபி-யுடன் இறுதிப்போட்டியில் மோதும்.