துபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்த இலங்கையின் ஜனாதிபதி அனுரவும் அவரது குழுவும் இன்று திங்கட்கிழமை (10) டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும்
துபாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற எதிர்கால அருங்காட்சியகத்தில்(Future Museum) நடைபெறும் ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
Trending
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு