உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை 176 புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவற்றில் 38 குற்றவியல் குற்றங்களுடன் தொடர்புடையவை, 138 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.
தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 14 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.