எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குளு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் தபால் மூலம் வாக்குகளைப் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 வாக்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
