சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு பரபரப்பான போட்டியில் தோற்கடித்தார்.
உலக தரவரிசையில் 64வது இடத்தில் உள்ள 21 வயதான தமிழகத்தைச் சேர்ந்த இவர், 66 நிமிட மோதலில் மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற வீரரை 18-21, 21-12, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதே நேரத்தில் பெண்கள் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் முன்னேறியுள்ளது.
உலகின் 9வது இடத்தில் உள்ள இந்த ஜோடி ஜேர்மனியின் அமெலி லெஹ்மன் மற்றும் செலின் ஹப்ஷ் ஜோடியை 21-12, 21-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.