உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பேரணியின் போது பேசிய ஜனாதிபதி தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் ஒரு குழுவை கண்டுபிடிக்க CID அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாகக் கூறினார்.