ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.
பதட்டமான புவிசார் அரசியல் சூழ்நிலை ஈரான், ஈராக் அருகிலுள்ள பகுதிகளின் வான்வெளியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.இதனால் ஏர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க அளவு வழித்தடங்கள் மாற்றப்பட்டு நீண்ட தூர விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் நிலையானதாக இருந்தாலும், சில விமான அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் ஒரு பொது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் உடனடி அப்டேட்களுக்கு நேரடியாக விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும், துல்லியமான தகவல்களுக்கு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
Trending
- இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்
- வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம்
- செம்மணியில் மனித உரிமைகள் ஆணைக்குழு
- செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிப்பு
- பாகிஸ்தான் – அயர்லாந்து கிரிக்கெட் தொடர் 2027வரை ஒத்திவைப்பு
- AI உதவியுடன் இசையமைத்த அனிருத்
- இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு
- சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்