Saturday, February 28, 2026 6:13 am
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் ஜேர்மனி தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
துருக்கியிலிருந்து, ஈரான் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் செல்லவிருந்த விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டன. துருக்கி ஏர்லைன்ஸ் மற்றும் இரண்டு ஈரானிய விமான நிறுவனங்களின் விமானங்களி ரத்து செய்யப்பட்டதாக இஸ்தான்புல் விமான நிலையம் அறிவித்தது.
ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் பேசியிருந்தார். அதில், ஈரானுடன் நடந்த உரையாடலில் திருப்தி இல்லை. இந்த உரையாடல் என்னை மகிழ்ச்சியடைய வைக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது ஈரானை சுற்றி அமெரிக்காவின் 2 சக்தி வாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களும், அதற்கு சப்போர்ட்டாக சிறிய தாக்குதல் கப்பல்களும் இருக்கின்றன.

