Monday, March 2, 2026 7:06 am
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை நம்பியதும், சீனாவின் வான்வெளி பாதுகாப்பு சாதனம் காலை வாரியதும் தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்து ஈரான் விளங்குகிறது. நிறைய ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வைத்துள்ளது. ஆனால் ஈரானிடம் வான்வெளி பாதுகாப்பு சாதனம் கிடையாது. அதாவது எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்களை முன்கூட்டியே அறிந்து வானிலேயே அழிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தில் ஈரான் பின்தங்கி உள்ளது. இந்த விஷயத்தில் ஈரான், ரஷ்யாவை நம்பியது. ரஷ்யாவும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தன.
ரஷ்யாவிடம் இருந்து S-300PMU-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை ஈரான் வாங்கியது. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கி நம் நாடு பயன்படுத்தி வரும் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் போல் செயல்படும். அதாவது எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகள் தாக்க வரும்போது அதனை கண்காணித்து உடனடியாக தாக்கும். இதற்கிடையே தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி தாக்கியது. அந்த தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கு எதிராக ரஷ்யாவின் S-300PMU-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு சரியாக செயல்படவில்லை. இஸ்ரேல், அமெரிக்காவின்போர் விமானங்கள், ஏவுகணைகளை அது கண்டுபிடித்து அழிக்கவில்லை. இதனால் ஈரான், ரஷ்யாவை விட்டு சீனாவின் பக்கம் சென்றது. சீனாவிடம் இருந்து புதிய வான்வெளி பாதுகாப்பு சாதனத்தை வாங்கியது. எண்ணெய் ஆயுதம் ஒப்பந்தத்தின் கீழ் இதனை ஈரான் வாங்கியது. அதாவது ஈரான் தனது நாட்டில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் வாங்கும். அதற்கு பதில் சீனா பணம் கொடுக்காமல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியாகும். இந்த ஒப்பந்தப்படி சீனாவிடம் இருந்து ஈரான் HQ-9B வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது.
HQ-9B வான் வெளி பாதுகாப்புக்கு ஈரான் ஏற்கனவே வைத்திருக்கும் ரஷ்யாவின் S-300PMU-2, பவார்-373, கோர்டாட்-15, ராட் , டோர்-M2, பான்ட்ஸிர்-S1, ஸோல்ஃபகர், MANPADS ஆகியவை பக்கபலமாக இருந்தன. நதான்ஸ் அணுசக்தி வளாகம், ஃபோர்டோ அணுசக்தி வளாகம், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு தளங்கள், தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் சீனாவின் HQ-9B நிலைநிறுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
அமெரிக்கா,இஸ்ரேல் தாக்குதல்களை ஈரான் ஏற்கனவே வைத்திருக்கும் ரஷ்யாவின் S-300PMU-2, பவார்-373, கோர்டாட்-15, ராட் , டோர்-M2, பான்ட்ஸிர்-S1, ஸோல்ஃபகர், MANPADS ஆகியவை பக்கபலமாக இருந்தன. நதான்ஸ் அணுசக்தி வளாகம், ஃபோர்டோ அணுசக்தி வளாகம், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு தளங்கள், தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் சீனாவின் HQ-9B நிலைநிறுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இஸ்ரேல்,அமெரிக்க தாக்குதல்களை HQ-9B யாலும் தடுக்க முடியவில்லை.

