Thursday, June 19, 2025 10:18 am
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனை அருகே ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் அங்கு கடமையாற்றிய இரோஷிகா சதுரங்கனி என்ற இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தனது வமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காயமடைந்த செவிலியர் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைக்காக தூதரக அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக நிமல் பண்டாரா மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடரும் கடுமையான மோதல்கள் காரணமாக ஏற்கனவே மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

