இஸ்ரேலில் சிக்கி இருந்த 119 சீன குடிமக்கள் எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள டாபா எல்லைக் கடந்து எகிபதிச் சென்றடைந்தனர்.
இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 117 மாணவர்களும் இரண்டு ஹொங்கொங் குடியிருப்பாளர்களும் அடங்குவர், அவர்கள் கெய்ரோவிற்கு மாற்றப்படுவார்கள் என எகிப்தில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.
“வெளிநாட்டில் உள்ள எங்கள் தோழர்களைப் பற்றி சீனா மிகவும் அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை” என்று எகிப்துக்கான சீனத் தூதர் லியாவோ லிகியாங் கூறினார்.