ஜனவரி 2025 முதல் இஸ்ரேலின் ஹோட்டல் வீட்டு பராமரிப்பு, சுகாதாரத் துறையில் மொத்தம் 692 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
177 தொழிலாளர்களிக்கொண்ட கொண்ட ஐந்தாவது குழு நேற்று (மே 16)இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைமையகத்தில் அதன் செயல் தலைவர் ஜனக அதிகாரி தலைமையில் நடந்த வைபவத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெற்றது. இந்தக் குழு மே 19 , 20 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளது.
இலங்கை , இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த வேலை வாய்ப்புகள் எளிதாக்கப்படுகின்றன. இந்த செயல்முறை அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுவதால், வேலை தேடுபவர்கள் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.