காஸா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகளில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய காஸா நகரத்தில் நெரிசலான சந்தையை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மருத்துவர் , ஒரு குழந்தை உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.
காஸா நகரத்தில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாம், தல் அல்-ஹவா, அல்-ஜீடவுன்,ம் அல்-சப்ரா ஆகிய பகுதிகளின் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக பாசல் மேலும் கூறினார்.