காஸாவில் ஞாயிற்றுக்கிழமை பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
காசா நகரின் அல்-நஸ்ர் மற்றும் ஷேக் ரத்வான் சுற்றுப்புறங்களில் உள்ள இரண்டு வீடுகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
இரண்டு வான்வழித் தாக்குதல்களிலும் குழந்தைகள் ,பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.
கிழக்கு காஸாவில் அல்-துஃபா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் அளித்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் பாசல் மேலும் கூறினார்.