முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என எதிர்பா்க்கப்படுகிறது.
கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முதலில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அவர் முன்னிலையாக இயலாமை குறித்து அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக திட்டமிடப்பட்டுள்ளார்.