மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார்.
இலங்கை-ரஷ்யா உறவுகளை வலுப்படுத்துவது , உலகளாவிய தளங்களில் ஒத்துழைப்பைப் பற்றி இருவரும் விவாதித்தனர்.பிரிக்ஸில் சேர இலங்கையின் ஆர்வத்தை லாவ்ரோவ் வரவேற்றார், ரஷ்யாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
ரஷ்யாவின் நீண்டகால நட்புறவுக்கு அமைச்சர் ஹேரத் நன்றி தெரிவித்தார், மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.