Tuesday, December 23, 2025 12:09 pm
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி , பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் 2025ம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 58 ஆயிரத்து 202 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 510,133 ஆகும்.
இவர்களில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 204,703 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 141,941 சுற்றுலாப் பயணிகளும் , பிரான்ஸிலிருந்து 106,155 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 103,477 சுற்றுலாப் பயணிகளும் , சீனாவிலிருந்து 129,403 சுற்றுலாப் பயணிகளும் , ரஷ்யாவிலிருந்து 174,267 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளதோடு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

