பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மீண்டும் தொடங்கியுள்ளது. முந்தைய விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய விசாரணை நடத்தப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
இது தொடர்பான ஒரு முன்னேற்றத்தில், பத்திரிகையாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைக் கோப்பையும் மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு சிஐடி அனுப்பியுள்ளது.