பருவ சீட்டு வைத்திருக்கும் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஏற்றிச்செல்வது கட்டாயமாகும்.
பருவ சீட்டு வைத்திருப்பவர்களை அரசாங்க பஸ்கள் ஏற்றிச் செல்லாவிட்டால் 1958 என்ற எண்ணை அழைத்து தலைமையகத்துக்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.