நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் இலகுரக வாகனங்கள் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரம் மாத்திரமே வழங்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.