கிரிபத்கொடையில் உள்ள காலா சந்திப்பில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றது.
சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சோதனை செய்த வேளை துப்பாக்கிச் சூடு நடந்தது.
சந்தேக நபர் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஒரு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
29 வயதுடைய நபரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.