பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா இங்கிலாந்து ,சீனா ஆகிய நாடுகள் தாம்து பிரஜைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஒபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான், இரு நாடுகளுக்கும் இருக்கும் மோதலை தவிர்க்குமாறு முன்னதாக அறிக்கை வெளியிட்ட சீனாசீனா, தற்போது மோதல் மண்டலத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.