ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 20 ஒவர்கள் கொண்ட இந்த தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அவுஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல் குர்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாமில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்.ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி இந்திய மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை தாண்டிய பதட்டங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக ஐபிஎல் ,பிஎஸ்எல் தொடர் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.