இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் ஆளில்லா ரொக்கெற்றை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதில் ‘வயோமித்ரா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ மனிதன் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், “ககன்யான் திட்டத்தின் சோதனைகள் 85% நிறைவடைந்துள்ளன. இந்த ஆளில்லா ரொக்கெற் பயணம் வெற்றியடைந்த பிறகு, அடுத்த இரண்டு ரொக்கெற்களும் ஆள் இல்லாமல் அனுப்பப்படும். அதன்பிறகு, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.