இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக பல்கலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஹ_னு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும், வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Trending
- இன்று உலக எமோஜி தினம்
- 3,200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது
- ஹட்டன் காலணியகத்தில் தீ விபத்து
- தசி கணேஷன் கொத்மலை தொகுதி மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு
- திருப்பூரிலிருந்து கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி
- முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம் நகரசபை ஏற்பாடு
- இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 34 பேர் கொல்லப்பட்டனர்