உலகளவில் ஆட்டிசம் மற்றும் பிற நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் (FHB) குழந்தை பராமரிப்பு மேம்பாடு மற்றும் சிறப்புத் தேவைகள் பிரிவின் தேசிய திட்ட மேலாளர் டாக்டர் ஆசிரி ஹேவமலகே, கூறினார். 18 மாத வயதுடைய குழந்தைகளின் ஒரு சிறிய மாதிரியில் 2009 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே இலங்கை கொண்டுள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய டாக்டர் ஹேவமலகே, 2009 கணக்கெடுப்பின்படி, 93 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.