Monday, July 21, 2025 7:51 am
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (20) தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரணையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.