ஹொங்கொங்கில் சனிக்கிழமை நடந்த சவூதி சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் அல்-நாசரை எதிர்த்து விளையாடிய அல்-அஹ்லி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ரொனால்டோவின் அல்நாசர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்காக ரொனால்டோ 100 ஆவது கோலை அடித்து சாதனை செய்துள்ளார்.
40 ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் அலி மஜ்ராஷியின் கையில் பந்து பட்டதால் கிடைத்த பெனால்டி வாய்ப்பஒப் பயன் படுத்திய ரொனால்டோ 100 ஆவது கோலை அடித்தார். நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.