Friday, June 6, 2025 10:13 am
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூறியதை பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவிக்கையில்,
” பாராளுமன்ற உறுப்பினர் சொன்னது முற்றிலும் ஆதாரமற்றது ,பொய்யானது , அத்தகைய அத்தகைய றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை . தேசிய பாதுகாப்பு விஷயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்று செயலாளர் தெரிவித்தார்.