யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான தகுதியை சவால் செய்து தாக்கல் செய்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அர்ச்சுனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு வழக்கில் இருப்பதால், வழக்கை ஒத்திவைக்கக் கோரினார்.
அதன்படி, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், ஜூன் மாதம் 26ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 2ஆம் திகதி ஆகிய திகதிகளில் விசாரிக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது.