உக்ரைன்ன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் , மத்திய கிழக்கிற்கான ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இந்த சந்திப்பிற்காக சவூதி அரேபியாவுக்குச் செல்வார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் , உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக ட்ரம்ப் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.
அடுத்த வாரம் சவூதி அரேபியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உக்ரேனிய அதிகாரிகள் கலந்து கொள்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரம்ப் புட்டின் ஆகியோருக்கு இடையேயான உரையாடலின் தொடர்ச்சியாக, சனிக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ரூபியோ பேசியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார்.