அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு E-mail மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது மே மாதத்தின் நடுப்பகுதியில் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொழிலதிபர் எலோன் மஸ்க் உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு மருத்துவ உதவி போன்ற திட்டங்களை குறைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.