Monday, March 2, 2026 6:46 am
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஆயுதப்படைகள் இராணுவ மோதலின் “புதிய கட்டத்திற்குள்” நுழைந்துள்ளதாகவும், நிலத்திலும் கடலிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வளைகுடாவில் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனை பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக ஈரானின் கூற்றை பென்டகன் ஞாயிற்றுக்கிழமை மறுத்தது. “லிங்கன் தாக்கப்படவில்லை. ஏவப்பட்ட ஏவுகணைகள் அருகில் கூட வரவில்லை,” என்று அமெரிக்க மத்திய கட்டளை X இல் கூறியது.

