ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனைக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க, ஜெர்மன் ஆயுதப்படைகளால் வழங்கப்பட்ட சம்பிரதாய மரியாதை உட்பட முழு அரசு மரியாதைகளுடனும் வரவேற்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
உத்தியோகபூர்வ வரவேற்பு விழாவைத் தொடர்ந்து, ஜனாதிபதி திசாநாயக்கவும் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியரும் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை இருதரப்பினரும் கவனம் செலுத்தினர்.
தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.