உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தாட்டிக்கா கண்டத்தில் இருந்து பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகி வருவது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இது “காலநிலை மாற்றத்தின் திருப்புமுனையாக” (climate tipping point) இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வுகள், அந்தாட்டிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், குறிப்பாக “பைன் ஐலேண்ட்” மற்றும் “துவைட்டீஸ்” ஆகிய பனிப்பாறைகள், அதிவேகமாக உருகி வருகின்றன என தெரிவிக்கின்றன.
இந்த பனிப்பாறை உருகும் வேகம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது இயற்கை பேரிடர்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அந்தாட்டிக்காவில் பனிப்பாறைகள் உருகி வருவதால், கடல் மட்ட உயர்வு, வெள்ளம், மற்றும் தீவிர வானிலை போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.