வன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், சீன சந்தையில் வன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஒக்ரோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விற்பனையில் சிறந்து விளங்கிய வன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகியிருக்கும் வன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், வன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மொடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் திகதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனினும், இதுபற்றி வன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.