Wednesday, January 28, 2026 9:55 am
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நள்ளிரவு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைந்த இளைஞன் ஒருவர் சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

