Friday, November 7, 2025 11:14 pm
கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை கல்லூரி வீதியின் உட் பக்கத்தால் செல்லும் 16 ஆவது ஒழுங்கையில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடம்பர வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்களில் ஒருவர், வாகனத்தில் இருந்து இறங்கி, வீதியால் நடந்து சென்ற இளைஞனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கிழே விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்து இரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த அந்த இளைஞனின் கை மீது குறித்த ஆட்மபர வாகனம் ஏறிச் சென்றுள்ளதை சிசிரி கமரா பதிவுகள் காண்பிக்கின்றன.
பழனி ரெமோஷன் என்பவர் தலைமையிலான குழு, புகுடு கண்ணா என்பர் தலைமையிலான குழுவை சேர்ந்த 41 வயதான ஒரு இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறினர்.
இந்த இரண்டு குழுக்களும் வெவ்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

