Monday, April 13, 2026 12:50 pm
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு காணப்பட்டுள்ளது. நேற்றிரவு ஆலய புனரமைப்பு பணிகள் இடம்பெற்ற போது குறித்த நபர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகி தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த 27 வயதான குகதீஸ்வரன் மயூரன் என்ற இளைஞன உயிரிழந்துள்ளார்.
இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

