Wednesday, November 26, 2025 12:09 pm
படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலகுடா களப்பில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
படகின் இன்ஜின் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதனை பழுதுபார்த்த பின், பரிசோதனை செய்ய கடலிற்குள் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

