Tuesday, October 28, 2025 11:12 am
வடமாகாணம் யாழ்ப்பாண நகரில் இலக்க தகடு இல்லாத புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர், குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தக பிரமுகர் ஒருவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரிடம் இருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் குற்றம் சுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

