Friday, January 2, 2026 11:04 am
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்கமைய ஆண்டின் தொடக்க நாளான நேற்று (01) இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தலைமையில் மாகும்புர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டமானது பயணிகளின் மத்தியில் சௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் , நடத்துனர்களுக்கும் பயணிகளுக்குமிடையே வெளிப்படைத் தன்மையை பேணும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்துவதனால் மேலதிக வரி ஏதும் அறவிடப்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் இத்திட்டத்தின் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்த பின் விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

