Friday, February 6, 2026 12:41 pm
வதோதராவில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது.
முதல் இன்னிங்ஸில் ஒரு அபாரமான துடுப்பாட்ட முயற்சியை வெளிப்படுத்தி WPL இறுதிப் போட்டியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை (203/4) டெல்லி அணி பதிவு செய்தது.
பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தது.
வெற்றியின் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் IPL மற்றும் WPL கிண்ணங்களை வென்ற முதல் அணி என்ற தனித்துவமான பெருமையையும் பெங்களூரு பெற்றது.
தனது அற்புதமான இன்னிங்ஸின் போது WPL வரலாற்றில் 1,000 ஓட்டங்களை நிறைவு செய்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றார்.
போட்டியின் ஆட்டநாயகியாக மந்தனா தெரிவானார். தொடரின் ஆட்டநாயகியாக சோஃபி டெவின் தெரிவானார்.

