Wednesday, October 29, 2025 4:45 pm
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருப்பவர்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் டாப்-8 இடம் வகிப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி ஹாங்காங்கில் டிசம்பர் 10ந் திகதி முதல் 14ந் திகதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க இந்தியாவின் மனுஷ் ஷா-தியா சிதாலே இணை தகுதி பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த போட்டிக்கு தகுதி பெறும் முதல் ஜோடி இவர்கள் தான். சமீப கால போட்டிகளில் பெற்ற வெற்றி மற்றும் தரவரிசையில் ஏற்றம் காரணமாக கௌரவமிக்க இந்தப் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

