Friday, November 14, 2025 11:58 am
A9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு — தட்டுவன் கொட்டி பகுதியில், 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பஸ் நிலையம் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டள்ளது.
மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

