Tuesday, November 4, 2025 7:00 pm
சர்ச்சகைக்குரிய மன்னார் கற்றாலைத் திட்டங்களை (wind projects) மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமைக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா உரிய அதிகாரிகளிடம் பணித்துள்ளார். இதன் பிரகாரம், அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுள்ளது.
மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் அமைச்சரவையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளத் திட்டத் திட்டத்திற்கு அமைவாக, காற்றாலை ஆற்றல் அதிகமுள்ள பிரதேசமாக மன்னார் அடையாளம் காணப்பட்டது. இதனால் மன்னாரில் மூன்று காற்றாலை மின் திட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
இது திட்டங்களில், மேற்கூறிய திட்டங்களில் ஒன்றான தம்பபவனி (Thambapavani) காற்றாலை மின் நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
வின்சேகேப் மன்னார் பிறைவேட் லிமிட்டட் (Windscape Mannar (Pvt) Ltd,) 20 மெகாவட் திட்டம், கேலீஸ் பென்ரன்ஸ் (Hayleys Fentons) 50 மெகாவாட் காற்றாலை திட்டம் ஆகியவற்றை, எதிர்வரும் டிசம்பர் 6 டிசம்பர் 20 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவிருந்தது.
இத்திட்டங்களினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் – சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பிரதான அம்சங்களை, கருத்திற் கொண்ட ஜனாதிபதி, மன்னார் மாவட்டத்தில் வாழும் மக்களின் விரும்பமின்றி காற்றாலை திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அறிவித்திருக்கிறார்.

