Friday, December 5, 2025 12:33 pm
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முட்டைகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நத்தார், புதுவருடம் போன்ற பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியை பாதிக்கக்கூடும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.

